சிம்பொனி நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மிகப் பெரிய இசை விருந்தாக இருக்கும் என்பதில் தனக்கு கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை என இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜா தனது முதல் சிம்பொனி நேரலை நிகழ்ச்சியை நாளை மறுதினம் லண்டன் அப்பல்லோ அரங்கத்தில் அரங்கேற்றம் செய்ய இருக்கிறார். இதற்காக இன்று சென்னை சர்வதேச விமானம் நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ இந்த புதிய சிம்பொனியை வெளியிடுவதற்காக உலகிலேயே தலைசிறந்த இசைக் குழுவான “Royal philharmonic orchestra,london” அவர்கள் வாசிக்க, ரசிகர்கள் எல்லாம் கேட்டு மகிழ 8 ஆம் தேதி இந்த இசை நிகழ்ச்சி அப்போலோ அரங்கில் நடைபெற உள்ளது. நிகச்சிக்கு வரவிருக்கும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும் என்பதில் எனக்கு கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை.” என்றார்
உலக அளவில் இந்த இசை ஒலிக்க உள்ள நிலையில் உங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளதா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது? அப்படி என்றால் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்” என்று சிரிப்புடன் பதில் அளித்தார்.
மேலும், “ஒரு நல்ல நிகழ்ச்சிக்காக செல்கிறேன். நல்ல மனதோடு வந்திருக்கும் அனைவரும், என்னை நல்லபடியாக வாழ்த்தி இசை நிகழ்ச்சியை நடத்த இறைவனை வேண்டி அனுப்புங்கள். இது என்னுடைய பெருமை அல்ல; நாட்டினுடைய பெருமை இந்தியாவினுடைய பெருமை; INCREDIBLE INDIA என்பது போல் INCREDIBLE ILAIYARAJA. இதுக்கு மேல யாரும் வரப்போறதும் இல்ல.,வந்ததும் இல்லை” என்றார்.
அத்துடன் , தேவா 2கே கிட்ஸ் தனது பாடல்களை பயன்படுத்துவதற்கு காப்புரிமை இல்லை என்று தெரிவித்துள்ளது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, “அதற்காகவா அழைத்துள்ளோம் ” என்று காட்டமாக பதிலளித்தார். அதேபோல், தமிழகத்தில் சிம்பொனி நிகழ்ச்சி ஒழிக்க வாய்ப்பு உள்ளதா? என கேட்டப்போது, “அனாவசியமான கேள்வியை எல்லாம் என்னிடம் கேட்காதீர்கள். நான் என் வேலையில் மட்டும் தான் கவனமாக இருப்பேன் நீங்கள் உங்கள் வேலையில் கவனமாக இருக்கிறீர்களா இல்லையா என்பது உங்களுக்குத்தான் தெரியும்.
நீங்கள் எல்லாம் சேர்ந்தது தான் நான்; உங்களுடைய பெருமையை தான் நான் அங்கு சென்று நடத்தப் போகிறேன். எல்லாருக்கும் வாழ்த்துக்கள்; இறைவனுடைய அருள் உங்கள் எல்லாருக்கும் கிடைக்கட்டும்” என்று கூறினார்.