அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார்.


இது தொடர்பாக அண்ணா பல்லைக்கழக பதிவாளர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாணவி பாலியல் புகார் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக உள் புகார் குழுவினருக்கு தற்போது தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. காவல் துறையினரின் விசாரணைக்கு ழுழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உயர்கல்வித்துறை உயர் அலுவலர்கள் அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாணவி புகார் வழக்கில் பல்கலைக்கழக நிர்வாகம் காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியாளர்கள் எப்போதும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும், கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் இந்த விரும்ப தகாத சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், இனி இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பல்கலைக்கழக அளவில் எடுக்க வேண்டிய கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மேலும், அனைத்து மாணவர்களின் பாதுகாப்பு எப்போதுமே முதன்மையான முன்னுரிமையாக இருப்பாகவும் அண்ணா பல்கலைக்கழம் விளக்கம் அளித்துள்ளது. குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து கைதுசெய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை உறுதியளித்துள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.


