கோவையில் ஜூன் 26 முதல் பின்னால் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம்
கோவையில் வரும் 26 ஆம் முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோரும் தலைகவசம் கட்டாயம் என மாநகர போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

கோவையில் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில், காவல் துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் சாலை பாதுகாப்பு மேம்படுத்துவது குறித்தும், சாலை விபத்து தடுப்பது, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனை அடிப்படையில் வரும் 26 ஆம் தேதி முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.


கடந்த மே மாதத்தில் நடந்த சாலையில் விபத்தில் உயிரிழந்த 30 பேரில் 23 பேர் தலைகவசம் அணியாததால் உயிரிழந்தது மற்றும் ஒரே மாதத்தில் 85% உயிரிழப்பு தலைக்கசவம் அணியாமலும், பின்னால் அமர்ந்து வருவோரும் உயிரிழந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விதிகளை மீறுவோர் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுப்பதோடு, கோவையில் போக்குவரத்து பூங்காவில் ஒரு வாரம் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாகவும் மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.


