போடி பேருந்து நிலையம் அருகே மாவட்ட சுகாதார இணை இயக்குனராக பணியாற்றும் அன்புச் செழியன் என்பவருக்கு சொந்தமான மருத்துவமனையில் 20 மணி நேரமாக மத்திய வருமானவரித்துறை அதிகாரிகள் வருமான வரிகணக்கு காட்டப்பட்ட சொத்துக்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

போடி புதிய பேருந்து நிலையம் எதிரே மாவட்ட குடும்ப நல சுகாதாரத்துறை இணை இயக்குனரும் தேனி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் டாக்டர் அன்புச்செழியன் என்பவருக்கு சொந்தமான மருத்துவமனையும் மாடியில் அவரது இல்லமும் உள்ளன. இவரது மனைவி அமுதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவராக பணியாற்றினார். தற்போது இப்ப பணியினை ராஜினாமா செய்து விட்டு தனக்கு சொந்தமான மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் மருத்துவமனையில் பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 20 மணி நேரமாக மத்திய வருமான வரித்துறை இயக்குனர் மைக்கேல் ஜெரால்ட் மற்றும் தேனி வருமானவரித்துறை அலுவலர் அம்பேத்கர் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவினர் மருத்துவமனையில் ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டப்பட்ட சொத்துக்கள் குறித்தும் சொத்துக்களில் ஒரு வருமானங்கள் குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் நடைபெறும் அறுவை சிகிச்சைகள் தினமும் வரும் வருமானங்கள் குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து இவருக்கு சொந்தமாக எங்கெங்கு சொத்துக்கள், தோட்டங்கள், ஏல தோட்டங்கள், வீடுகள் உள்ளது என்பது குறித்தும் தனது தமக்கு சொந்தமான பூர்வீக சொத்துக்கள் குறித்தும் வருமான வரித்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இவற்றின் மூலம் வரும் வருமானங்கள் எவ்வளவு? எவ்வளவு வருமான வரி கட்டி உள்ளார்? என்பது குறித்து தணிக்கை செய்து வருகின்றனர்.
