spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகி.வீரமணிக்கு தலைசால் தமிழர் விருது! விருதாளர்களின் முழு விவரம்

கி.வீரமணிக்கு தலைசால் தமிழர் விருது! விருதாளர்களின் முழு விவரம்

-

- Advertisement -

கி.வீரமணிக்கு தலைசால் தமிழர் விருது! விருதாளர்களின் முழு விவரம்

சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் நடைபெற்ற சுதந்திரத் திருநாள் விழாவில், ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருதுகள், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான விருதுகள், மகளிர் நலத்திற்கான சிறந்த சேவைக்காக தொண்டாற்றியவர்களுக்கான விருது, சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள், முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள், காவல் பதக்கங்கள் ஆகிய தமிழ்நாடு அரசின் விருதுகளையும், பதக்கங்களையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

we-r-hiring

Image

அதன்படி, சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் நடைபெற்ற சுதந்திரத் திருநாள் விழாவில், முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தின் கண்காணிப்பு செல்லிட செயலியை உருவாக்கிய தமிழ்நாடு மின் ஆளுமை முகமைக்கு முதலமைச்சரின் நல் ஆளுமை விருது இணை இயக்குநர் (மின் ஆளுமை) திருமதி பெ.ரமண சரஸ்வதிக்கு வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த நிறுவனத்திற்கான தமிழ்நாடு அரசு விருதினை கன்னியாகுமரி, சாந்தி நிலையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Image

துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருதினை செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி நா.முத்தமிழ்செல்வி அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

Image

டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் விருதுக்கான தங்கப் பதக்கம், காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை, வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கணினித் துறை பேராசிரியர் முனைவர் டபிள்யூ.பி.வசந்தா கந்தசாமிக்கு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு தகைசால் தமிழர் விருதுடன் ரூ. 10 இலட்சத்திற்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

MUST READ