spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"இந்தியாவை வலிமையாக்க பிரதமர் உழைத்து வருகிறார்"- ஜெ.பி.நட்டா பேச்சு!

“இந்தியாவை வலிமையாக்க பிரதமர் உழைத்து வருகிறார்”- ஜெ.பி.நட்டா பேச்சு!

-

- Advertisement -

 

"இந்தியாவை வலிமையாக்க பிரதமர் உழைத்து வருகிறார்"- ஜெ.பி.நட்டா பேச்சு!

we-r-hiring

அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் பா.ஜ.க. சார்பில் நடந்த மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சார பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கலந்து கொண்டு, சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கார்த்திகாயினை ஆதரித்து வாக்குச் சேகரித்தார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!

அப்போது, ஜெ.பி.நட்டா தெரிவித்ததாவது, “சீனாவில் உற்பத்திச் செய்யப்பட்டப் பொருட்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய வைத்தவர் பிரதமர் நரேந்திர மோடி. ‘மேட் இன் சீனா’ என்பது இப்போது ‘மேட் இன் இந்தியா’ ஆக மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவை வலிமையான நாடாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி உழைத்து வருகிறார்.

மற்றொரு ஆட்டத்தில் லக்னோvsகுஜராத் அணிகள் பலப்பரீட்சை!

பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி வரும் திட்டங்களால் இந்தியாவில் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது. 11.4 கோடி மக்களுக்கு வீடுகளுக்கே குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது; ஆட்டோ மொபைல் உற்பத்தியில் உலகளவில் இந்தியாவுக்கு 3- வது இடம்; தமிழர்களின் கலாச்சாரத்தை தி.மு.க.அழிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ