நாளை முதல் தமிழகத்தில் வெளி மாநில பதிவு எண் உள்ள ஆம்னி பேருந்துகளுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படவில்லை. மேலும் ஆம்னி பேருந்துகள் தமிழக பதிவு எண் இல்லாமல் இயங்கினால் நாளையில் இருந்து சிறைபிடிக்கப்படும் என போக்குவரத்து துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் விதிகளை மீறி 600 வெளிமாநில பதிவு எண் கொண்ட பேருந்துகள் இயக்கி வருகிறது. ஜூன் 14 ஆம் தேதி முதல் வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகள் தமிழகத்தில் இயங்கினால் சிறைபிடிக்கப்படும் என போக்குவரத்துறை ஏற்கனவே கடந்த நவம்பர் மாதத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது.
பலமுறை போக்குவரத்து துறை சார்பில் அவகாசம் வழங்கியும் வெளி மாநில பதிவிலேயே பேருந்தை இயக்குவதால் ஆம்னி உரிமையாளர்களால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என கடந்த 6 மாதத்திற்கு முன்பே அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு நாளை ஜூன் 14 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்காக கிண்டியில் உள்ள போக்குவரத்து துறை ஆணையராகத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு தாமதமாக வந்த ஆம்னி பேருந்து உரிமையாளர்களை ஆலோசனை கூட்டத்திற்கு உள்ளே அனுமதிக்காமல் வெளியில் காத்திருந்தனர். அதன்பிறகு அனுமதி வழங்கப்பட்டு ஆலோசனை கூட்டத்திற்கு சென்றனர்.
வெளிமாநில பதிவு எண் உள்ள பேருந்துகளை தமிழ்நாடு பதிவு எண்ணாக மாற்ற 6 மாதகால அவகாசம் போக்குவரத்து துறை சார்பில் வழங்கப்பட்டு இருந்தனர். தேர்தல் நேரம் என்பதால் தமிழக பதிவு எண்ணை மாற்ற முடியவில்லை.
பரோட்டா சாப்பிட்ட வாலிபர் மாரடைப்பால் மரணம் (apcnewstamil.com)
இன்னும் 1 மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைக்க இருக்கிறோம் என்று சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.