சென்னையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
17வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று கோலாகலமாக தொடங்கியது. முதலாவது லீக் ஆட்டத்தில் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாப் டூ பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டூ பிளஸ்சிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலாவதாக பேட்டிங் செய்த பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.4 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், சென்னையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னையில் நேற்று நடந்த CSK – RCB போட்டிக்கான டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 5 பேரை கைது செய்து திருவல்லிக்கேணி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். வினோத்குமார், அசோக்குமார், இம்மானுவேல் உள்ளிட்ட 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 8 டிக்கெட் மற்றும் ₹31,500 பணத்தையும் கைப்பற்றி சிறையிலடைத்தனர்.