spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமாற்று திறனாளிகளின் பழைய பெயரை உச்சரித்தது தவறு - துரைமுருகன் வருத்தம்

மாற்று திறனாளிகளின் பழைய பெயரை உச்சரித்தது தவறு – துரைமுருகன் வருத்தம்

-

- Advertisement -

ஒரு பொதுக்கூட்டத்தில் பேச்சின் வேகத்தில் மாற்றுத் திறனாளிகளின் பழைய பெயரையே கொண்டு உச்சரித்து விட்டேன். அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.மாற்று திறனாளிகளின் பழைய பெயரை உச்சரித்தது தவறு - துரைமுருகன் வருத்தம்மேலும் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”  இயற்கையிலேயே உடலில் ஏற்பட்ட குறைபாடு உடையவர்களை அருவருக்கும் பெயர் கொண்டு, அவர்களை அழைத்து வந்ததை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கருணை உள்ளத்தோடு “மாற்றுத் திறனாளிகள்”” என்று பெயரிட்டு அழைத்தார். அதையே நாங்களும் பின்பற்றி வருகிறோம்.

அப்படிப்பட்ட நானே, ஒரு பொதுக்கூட்டத்தில் பேச்சின் வேகத்தில் மாற்றுத் திறனாளிகளின் பழைய பெயரையே கொண்டு உச்சரித்து விட்டேன் என்று கழகத் தலைவர் தளபதி அவர்கள் என் கவனத்திற்கு கொண்டு வந்தபோது, நான் அதிர்ச்சியும் – வருத்தமும் அடைந்தேன்.  கலைஞரால் வளர்க்கப்பட்ட நானே இப்படிப்பட்ட தவறை செய்தது மிகப் பெரிய தவறாகும்.  மாற்றுத் திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும். அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

we-r-hiring

தலைவர் தளபதி அவர்கள், எந்தளவிற்கு வருந்தியிருப்பார் என்பது எனக்குத் தெரியும்.  அவருக்கும் என் வருத்தத்தை தெரிவித்து, இனி இத்தகைய நிகழ்வு நிகழாது என்று உறுதி அளிக்கிறேன்” என தெரிவித்துள்ளாா்.

806 கோடியே 22 லட்சம் ரூபாய் இழப்பீடு குறித்து தமிழக அரசு விளக்கம் – விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம்

MUST READ