
வரும் ஜனவரி 23- ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்.
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு- உச்சநீதிமன்றம் கேள்வி!
தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வரும் ஜனவரி 28- ஆம் தேதி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தொழில் முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு முதலமைச்சர் செல்லவுள்ளார்.
இந்த நிலையில், வரும் ஜனவரி 23- ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
துணைவேந்தர் மீதான வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை!
அமைச்சரவைக் கூட்டத்தில், தொழில் முதலீடுகள், கொள்கை ரீதியிலான முடிவுகள் எடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது. மேலும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான தொழில் முதலீடுகள் தொடர்பான ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவுள்ளது.
மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவையைக் கூட்டுவது, அரசியல் சூழல், அரசு திட்டங்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசிக்கவுள்ளார்.