Homeசெய்திகள்தமிழ்நாடு"ஜனநாயகன்" திரைப்பட வெளியீட்டை திருவிழாவைப் போல் கொண்டாட வேண்டும்: நிர்வாகிகளுக்கு அமைச்சர் என்.ஆனந்த் அதிரடி அறிவுறுத்தல்!

“ஜனநாயகன்” திரைப்பட வெளியீட்டை திருவிழாவைப் போல் கொண்டாட வேண்டும்: நிர்வாகிகளுக்கு அமைச்சர் என்.ஆனந்த் அதிரடி அறிவுறுத்தல்!

-

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய் நடித்துள்ள “ஜனநாயகன்” திரைப்படம் வரும் ஜூலை 23-ஆம் தேதி (வியாழக்கிழமை) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. முதலமைச்சர் விஜய் நடித்துள்ள கடைசித் திரைப்படம் இது என்பதால், இதன் வெளியீட்டைக் கொண்டாடுவது குறித்துக் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னணித் தலைவரும், அமைச்சருமான என்.ஆனந்த் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜனநாயகன்

we-r-hiring

கடைசித் திரைப்படம் – திருவிழாக் கொண்டாட்டம்:

“தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் அவர்கள் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், இம்மாதம் 23-ஆம் தேதி வியாழக்கிழமையன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மாண்புமிகு முதல்வர் அவர்கள் முழுநேர அரசியலில் ஈடுபடுவதற்காக நடித்த கடைசித் திரைப்படம் இது என்பதால், தமிழகம் முழுவதும் உள்ள தங்களது பகுதிகளில் இந்த வெளியீட்டை ஒரு பிரம்மாண்டமான திருவிழாவைப் போலக் கொண்டாட வேண்டும்.

நிர்வாகிகளுக்கு உத்தரவு:

கட்சியின் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நகரம், பேரூர், பகுதி, ஒன்றியம், வார்டு, கிளை மற்றும் சார்பு அணி என அனைத்து நிலை நிர்வாகிகளும் தங்களது பகுதிகளில் உள்ள திரையரங்குகளைக் கட்சியின் வழிகாட்டுதல்களின்படி சிறப்பாக அலங்கரிக்க வேண்டும். ரசிகர்கள் மட்டுமன்றி, பொதுமக்களும் மிகுந்த உற்சாகத்துடன் இத்திரைப்படத்தைக் காணும் வகையில் தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்” என அன்புடன் கேட்டுக்கொள்வதாக அமைச்சர் என்.ஆனந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சரின் கடைசித் திரைப்படம் என்பதால் ஒட்டுமொத்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீட்டைப் பிரம்மாண்டமாக எதிர்கொள்ளத் தயாராகி வருவதால், தியேட்டர்களில் இப்போதே திருவிழா அவுட்டோர் ஏற்பாடுகள் களைகட்டத் தொடங்கியுள்ளன.

MUST READ