சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து தங்க வெள்ளி வைரம் நகைகளை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் சொத்து குவிப்பு வழக்கை விசாரித்து வந்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இன்று இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ தங்கம், வெள்ளி, வைரம் நகைகளையும் 1562 ஏக்கர் நிலங்களில் பத்திரங்களையும் பிப்ரவரி 14 மற்றும் 15ஆம் தேதி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நீதிபதி எச்.வி. மோகன் கடந்த ஜனவரி 29ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
பிப்ரவரி 14 மற்றும் 1 5ஆம் தேதி தமிழ்நாடு சேர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த பொருட்களை எடுத்து செல்வதற்கு ஆறு பெட்டிகளுடன் வர வேண்டும் என்றும் அதற்கான உரிய வாகன வசதி பாதுகாப்பு வசதிகளை ஏற்பாடு செய்து நீதிமன்றத்திற்கு வந்து அனைத்து பொருட்களையும் பெற்று எடுத்து செல்ல உத்தரவு பிறப்பித்துள்ளார்.