சேப்பாக்கத்தில் பேராசிரியர் அருணனுக்கு நடைபெற்ற பாராட்டு வழாவில் கோபண்ணா,Ex IAS ஞான ராஜசேகரன், சேது சொக்கலிங்கம் உள்ளிட்டூர் கலந்துகொண்டு அருணனுக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர். சேப்பாக்கத்தில் உள்ள (சர்மணி) தனியார் விடுதியில் பபாசியின் கலைஞர் பொற்கிழி விருது பெற்ற பேரா.அருணனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணைத் தலைவர் கோபண்ணா,Ex IAS ஞான ராஜசேகரன், பப்பாசி தலைவர் சேது சொக்கலிங்கம் உள்ளிட்டூர் கலந்துகொண்டு அருணனுக்கு பாராட்டுத் தெரிவித்த பின்பு மேடையில் உறையாற்றினார்கள்.
பேராசிரியர் அருணன் பேசியதாவது – கலைஞர் அவர்களுக்கு நன்றி சொல்வது ஏன் என்றால் எங்களை போன்றோருக்கு பொற்கிழி வழங்கியவர் அவர் தான்.ஒரு மாநில கட்சி தலைவர் அயோத்தி போல் தமிழ்நாட்டையும் மாற்றுவோம் என்று கூறுகிறார். ஆனால் இந்து மக்களுக்காக தங்கத்தின் விலை குறைத்துக் கொடுத்தால் நல்லது. இந்து மக்களுக்காக பெட்ரோல் விலை குறைத்துக் கொடுத்தால் நல்லது என்று பிஜேபியை விமர்சனம் செய்தார்.

திருப்பரங்குன்றம் அனைத்து தமிழர்களுக்கும் சொந்தம். தமிழர்களில் சமணர்கள் உண்டு, இந்துக்கள் உண்டு, முஸ்லிம்கள் உண்டு ஆகவே அனைத்து மதத்தவருக்கும் சொந்தம் எனவே திருப்பரங்குன்றத்தை காப்பாற்றுவோம் தமிழர்களே. மதவெறியர்களிடமிருந்து வகுப்புவாதிகளிடமிருந்து திருப்பரங்குன்றத்தை காப்பாற்ற வேண்டும். மக்கள் ஒற்றுமை இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது. மத அடிப்படையில் பேசக்கூடிய நபர்கள் மக்களின் வாழ்க்கை தேவைகளை பற்றி பேசுவதில்லை மக்களின் பொருளாதார முன்னேறத்திற்கான வழிகாட்டுதல்களை பற்றி பேசுவதில்லை.
நீங்கள் இந்து மக்களுக்காக பேசுவதாக இருந்தால் விலைவாசி பற்றி பேசுங்கள், வேலையில்லா திண்டாட்டத்தை பற்றி பேசுங்கள், அதையெல்லாம் பேசாவிட்டாலும் பரவாயில்லை குறைந்தபட்சம் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்களுக்காகவாவது பேசுங்கள். அதானி பற்றி மட்டும் பேசிவிட்டு வராதீர்கள் இவர்களைப் பற்றியும் பேசுங்கள் என்று கூறினாா்.காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணைத் தலைவர் கோபண்ணா, பேசியதாவது – எனக்கு பேராசிரியர் அருணன் அவர்களுக்கும் சந்திப்பு என்பது தொலைக்காட்சியின் வாயிலாக தான் நடைபெற்றது. தொலைக்காட்சியில் அருணன் பேசுகிறார் என்றால் வகுப்புவாத சக்திகள் அனைத்தும் அரண்டு போகிறது. அவருடைய கருத்துக்கள் மிகக் கூர்மையானதாக இருக்கும்.
அருணன் மற்றும் என்னை போன்ற சிலர் தொலைக்காட்சியில் வாதம் செய்யும்போது அதனை ஏற்றுக்கொள்ள முடியாத வலதுசாரிகள், பாஜகவை சேர்ந்த வகுப்புவாதிகள் என்னுடன் சண்டை போடுவதற்கு வந்து விடுவார்கள். தமிழ்நாட்டில் சமூக சீர்திருத்த கருத்துக்களை தந்தை பெரியாரை போன்று சமூகத்தை முன்னேற்றக் கூடிய சமூக சீர்திருத்தங்களை அருணன் எடுத்து செல்கிறார். அதனால் அவரை நான் பாராட்டுகிறேன்.
இன்றைக்கு தமிழ்நாட்டில் வகுப்பு வாத சக்திகளை முறியடிக்கக் கூடிய பணிகளில் பேராற்றலுடன் செயல்பட்டு வருகிறார் பேராசிரியர் அருணன். புதிய பொருளாதாரக் கொள்கைக்கு ஆதரவாக நான் பேசும் போது எனக்கு எதிராக கடுமையாக விமர்சனம் செய்தவர். அதேபோன்று ஒரு கட்டத்தில் பாஜகவை வீழ்த்துவதற்காக கொள்கை ரீதியாக இரட்டை குழல் துப்பாக்கி போன்று நாங்கள் செயல்படுகிறோம் என கோபண்னன் தெரிவித்தார்.Ex IAS அதிகாரி ஞான ராஜசேகரன் உறையாற்றியபோது – வரலாற்று ஆசிரியர்கள் நம்முடைய இந்திய வரலாற்றை எழுதும் போது புத்தர் காலம் பொற்காலம், சோழர் காலம் பொற்காலம் என்று சொல்லுவார்கள். ஏனென்றால் புத்தர் காலத்தில் தான் அனைத்து வேதங்களும் எழுத்து வடிவில் கொண்டுவரப்பட்டது. ஸ்மிருதி, மனு சாஸ்திரம் எழுத்து வடிவம் பெற்றது. தென்னகத்தில் சனாதனத்தின் ஒரு சிலர் கூறுகளை கொண்டு வந்ததால் தான் சோழ நாட்டில் பொற்கால ஆட்சி எனக் கருதப்பட்டது.
நாடு என்பது அரசு சம்பந்தப்பட்டதோ அல்லது ஒரு குடும்பம் சம்பந்தப்பட்டதோ அல்ல ஒரு நாடு என்பது நாட்டில் உள்ள மக்களை சம்பந்தப்பட்டது. இந்துத்துவா தத்துவத்தில் செயல்படக்கூடியவர்கள் வரலாற்றை வேறு விதமாக பார்க்கிறார்கள். பழமையான இந்தியாவில் பாலும், தேனும் ஓடியதாகவும் , முஸ்லிம்கள், ஆங்கிலேயர் வந்த பிறகு தான் எல்லாம் அழிந்து போனது என நினைத்துக் கொண்டிருக்கிறாா்கள்.
ஆங்கிலேயர்களால் தான் சுதந்திரமான கல்வி கிடைத்தது. இன்றைய சூழல் போன்று சமூகத்தில் அப்போது ஒரு 10 சதவீத மக்கள் கூட கிடையாது. சத்திரியர்களும், பிராமணர்களும் இவர்களை தாண்டி பெருமளவு உள்ள தலித்துகளையோ ,பிற்படுத்தப்பட்ட மக்களையோ பற்றி யோசிக்கவில்லை. ஆனால் இன்று அப்படி அல்ல, இட ஒதுக்கீட்டில் இருந்து பல நன்மைகள் கிடைத்துள்ளது அதற்கு மிக முக்கிய மான காரணம் சுதந்திரமான கல்விதான்.
அன்று நாடு பிரமாதமாக இருந்ததாகவும் இன்று அதையெல்லாம் சிதைந்து விட்டதாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது அப்படி இல்லை ராஜாக்கள் எந்தெந்த காலகட்டத்தில் வாழ்ந்தார்களோ அப்போதெல்லாம் தன்னுடைய அரசுக்கு ஆபத்து என்றால் தந்தையையும், அண்ணனையும் கொலை செய்தவர்கள் தான் அப்போது அரசர்களாக இருந்துள்ளனர். சோழர்கள் ,அவுரங்கசீப் ,சிவாஜி உட்பட அனைவரும் இப்படி தான் செயல்பட்டுள்ளனர்.
இந்துக்கள் என்றால் அனைவரும் நல்லவர்கள் முஸ்லிம் ,கிறிஸ்தவர்கள் என்றால் கெட்டவர்கள் என்று சித்தரிக்கப்படுகிறது. ஆனால் வடக்கு எந்தெந்த மசூதிக்கு கீழ் இந்து கோவில்கள் உள்ளது என தேடி வருகிறார்கள். அதுவே தெற்கே பார்த்தால் எல்லா இந்து கோவில்களுக்கும் கீழ் புத்த கோவில்களும், சமணக் கோவில்களும் தான் உள்ளது. சமண மதமும், புத்த மதமும் இந்து மதத்தின் ஒரு பாகமாக மாறியதால் அதைப்பற்றி யாரும் கேள்வி கேட்பதில்லை. தமிழ்நாட்டைக் கண்டு அஞ்சுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் அரசியலும், ஆன்மீகமும் வேறு என்கின்ற புரிதல் மக்களுக்கு தெளிவாக உள்ளது அதனாலயே அவர்கள் அஞ்சுகிறார்கள்.பெரியார் மட்டும்தான் அவருடைய மேடைகளில் ஆன்மீக நம்பிக்கையுடைய நபர்களை வைத்துக் கொண்டு மூடநம்பிக்கைகளைப் பற்றியும், கடவுளை பற்றியும் விமர்சனம் செய்தார் என்று கூறியுள்ளாா்.
கல்வியில் காவியைப் புகுத்தும் பாஜக அரசு – திமுக மாணவர் அணி கண்டனம்..!