
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், காசா பகுதியில் இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வருகிறது. இந்த தாக்குதலில் 300- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 1,990 பேர் படுகாயமடைந்துள்ளனர். சுமார் 24 மணி நேரத்தில் காசா பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேற்ற இலக்கு நிர்ணயித்துள்ள இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர்- ஆஸ்திரேலிய அணி பேட்டிங்!
அதேபோல், தெற்கு லெபனான் பகுதியில் பீரங்கி தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. காசா பகுதியில் உள்ள ஹமாஸ் பிரிவின் தலைவர்களின் வீடுகள், வங்கிகளைக் குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்த நிலையில், இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும், எச்சரிக்கையுடன் இருக்கவும் கேட்டுக் கொண்டுள்ள இந்திய தூதரகம், தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்கவும், உள்ளூர் செய்திகளை உன்னிப்பாகக் கவனிக்கவும், பாதுகாப்பு முகாம்களில் தங்கவும் அறிவுறுத்தியுள்ளது.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து- மத்திய அரசு கடிதம்!
அதன் தொடர்ச்சியாக, ஜெருசலம் புனித பயணத்தைத் தவிர்ப்பது நல்லது என தமிழக அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.