spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"ஜியோ நிறுவனம் தமிழகத்தில் முதலீடு"- முகேஷ் அம்பானி அறிவிப்பு!

“ஜியோ நிறுவனம் தமிழகத்தில் முதலீடு”- முகேஷ் அம்பானி அறிவிப்பு!

-

- Advertisement -

 

"ஜியோ நிறுவனம் தமிழகத்தில் முதலீடு"- முகேஷ் அம்பானி அறிவிப்பு!

we-r-hiring

‘தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு- 2024’ சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை இன்று (ஜன.07) காலை 10.00 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மூத்த இயக்குனருடன் புதிய படத்தில் இணையும் மோகன்லால்!

அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை செய்யவுள்ள தொழில் நிறுவனங்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகிறது.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் காணொளி காட்சி மூலம் பங்கேற்று பேசிய ஜியோ ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, “மாநாட்டிற்கு நேரில் வராதது வருத்தமளிக்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலை தமிழ்நாட்டில் அடுத்த வாரம் தொடங்கப்படவுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஜியோ நிறுவனம் தமிழ்நாட்டில் ரூபாய் 35,000 கோடியை முதலீடு செய்துள்ளது. தமிழகம் அறிவுசார் பாரம்பரியத்திற்கு புகழ்பெற்ற மாநிலம்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் ரசிகர்களிடம் நல்ல பெயர் கிடைக்க வேண்டும்… இளம் நாயகி பவ்யா ஆசை…

இதனிடையே, JSW நிறுவனத்துடன் ரூபாய் 10,000 கோடி மதிப்பில் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தூத்துக்குடி, நெல்லையில் JSW இரும்பு தயாரிப்பு நிறுவனம் மூலம் 6,600 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ