Homeசெய்திகள்தமிழ்நாடு"நூலகத்தினால் அறிவுத் தீ பரவப் போகிறது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“நூலகத்தினால் அறிவுத் தீ பரவப் போகிறது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

-

 

"நூலகத்தினால் அறிவுத் தீ பரவப் போகிறது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
Photo: TN Govt

மதுரை மாவட்டம், புதுநத்தம் சாலையில் 2,13,338 சதுர அடி பரப்பளவில், தரைத்தளம் மற்றும் ஆறு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை நேற்று (ஜூலை 15) மாலை 05.00 மணிக்கு திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நூலகத்தைப் பார்வையிட்டார். அத்துடன், பார்வையாளர் கையேட்டில் குறிப்பெழுதி கையொப்பமிட்டார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட ஹெச்.சி.எல். குழுமத்தின் நிறுவனர் ஷிவ் நாடார் மற்றும் ஹெச்.சி.எல். நிறுவனத்தின் தலைவர் ரோஷினி நாடார் ஆகியோருக்கு நூலகத்திற்கான உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.

ஆடி மாத திருவிழாவையொட்டி, ஆட்டுச் சந்தைகளில் வர்த்தகம் களைகட்டியது!

விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நூலகத்தினால் தமிழகத்தில் அறிவுத் தீ பரவப் போகிறது. சென்னையில் மருத்துவமனையும், மதுரையில் நூலகமும் கலைஞர் பெயரில் திறக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையும், நூலகமும் தி.மு.க. அறிவிக்காத தேர்தல் வாக்குறுதிகள். கல்வியும், சுகாதாரமும், திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்களாக உள்ளன.

ஹெச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடாரை மாணவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக அழைத்து வந்துள்ளோம். அரசுப் பள்ளியில் படித்த ஷிவ் நாடார் ஹெச்.சி.எல். போன்ற பெரும் நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். கலைஞர் மேல் உள்ள அன்பின் வெளிப்பாடே இந்த நூலகம் அமைவதற்கு காரணம். மாணவராக இருந்த காலத்திலேயே மொழிக்காகவும், இனத்துக்காகவும் போராடத் தொடங்கினார் கலைஞர்.

தமிழகம் தனித்தன்மையோடு தனித்து இயங்குவதற்கு இந்தி எதிர்ப்பு போராட்டமே காரணம். மாணவர்கள் படிப்பு ஒன்றையே நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும். எத்தனை தடைகள் வந்தாலும் படிப்பை மட்டும் மாணவர்கள் கைவிட்டு விடக் கூடாது. படிப்பை அனைவரும் அடைய வேண்டும் என்பதற்காகவே நவீன தமிழ்நாடு உருவாக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

“காமராஜர் தனது தாயாருக்கு மாதம் எவ்வளவு தொகை அனுப்புவார் தெரியுமா?”- நடிகர் சிவக்குமார் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

இந்த விழாவில், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மதுரை மாநகராட்சி மேயர், மாநகராட்சி துணை மேயர், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப., பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன் இ.ஆ.ப., பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா இ.ஆ.ப., மதுரை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.சங்கீதா இ.ஆ.ப. மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

MUST READ