Homeசெய்திகள்தமிழ்நாடு"காமராஜர் தனது தாயாருக்கு மாதம் எவ்வளவு தொகை அனுப்புவார் தெரியுமா?"- நடிகர் சிவக்குமார் பகிர்ந்த சுவாரஸ்ய...

“காமராஜர் தனது தாயாருக்கு மாதம் எவ்வளவு தொகை அனுப்புவார் தெரியுமா?”- நடிகர் சிவக்குமார் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

-

 

"காமராஜர் தனது தாயாருக்கு மாதம் எவ்வளவு தொகை அனுப்புவார் தெரியுமா?"- நடிகர் சிவக்குமார் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!
File Photo

காமராஜரின் 121வது நாளான இன்று (ஜூலை 15) தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல், அவரது திருவுருவப்படத்திற்கு தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் மலர்த்தூவி மரியாதைச் செலுத்தி வருகின்றனர்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருடன் அஜித் பவார் திடீர் சந்திப்பு!

காமராஜர் குறித்த சுவாரஷ்ய தகவல் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

கடந்த 1903- ஆம் ஆண்டு ஜூலை 15- ஆம் தேதி அன்று விருதுநகர் மாவட்டத்தில் குமாரசாமி- சிவகாமி தம்பதிக்கு மகனாக பிறந்தவர் காமராஜர். ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த காமராஜர் தனது சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். தான் 6-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே பள்ளிச் செல்வதை நிறுத்த வேண்டிய நிலைமைக்கு ஆளானவர். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவர் காமராஜர். தனது 18 வயதில் அதாவது 1920- ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்தார் காமராஜர். பின்னர், 1921- ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு முழு நேரமாகப் பணியாற்றத் தொடங்கினார். விருதுநகர் மாவட்டத்தில் தனது தலைமையில் பொதுக்கூட்டத்தை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து, கடந்த 1921- ஆம் ஆண்டு செப்டம்பர் 21- ஆம் தேதி அன்று மகாத்மா காந்தி, மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்தார். அப்போது அங்கு நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற காந்தியை, காமராஜர் முதன்முறையாக சந்தித்துப் பேசினார். பின்னர், காந்தி குடும்பத்துடன் நெருங்கிப் பழகி நன்மதிப்பைப் பெற்றார் காமராஜர்.

நாடு சுதந்திர பெறுவதற்காக பாடுபட்ட காந்தி, நேரு உள்ளிட்டத் தலைவர்களுக்கு உறுதுணையாக இருந்தார். பின்னர், அப்போதைய சென்னை மாகாணத்தில் மூன்று முறை முதலமைச்சராக இருந்த காமராஜர், கடந்த 1954- ஆம் ஆண்டு முதல் 1963- ஆம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார். காமராஜரின் ஆட்சிக்காலம் பொற்காலம் என்றும், இன்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில், பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம், அரசு நிறுவனங்கள், அணைகள், இலவசக் கல்வி, வேலை வாய்ப்பு என தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றதுடன், இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார்.

அதைத் தொடர்ந்து, கடந்த 1969- ஆம் ஆண்டு முதல் 1975- ஆம் ஆண்டு வரை நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராகப் பதவி வகித்துள்ளார். அத்துடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சுமார் ஐந்து ஆண்டுகள் பதவி வகித்துள்ளார்.

ராகுல் காந்தியை சிறையில் தள்ள பாஜக ஆர்வம்

நேருவின் மறைவுக்குப் பிறகு இந்தியாவின் பிரதமரை இருமுறை தேர்ந்தெடுப்பதில் முக்கியப் பங்கு வகித்தவர் காமராஜர். அதனால்தான் அவர் ‘கிங் மேக்கர்’ என அழைக்கப்படுகிறார். காமராஜருக்கு பெருமை சேர்க்கும் வகையில், கடந்த 1972- ஆம் ஆண்டு தாமிர பத்திர விருதையும், 1976- ஆம் ஆண்டு பாரத ரத்னா விருதையும் மத்திய அரசு வழங்கி கௌரவித்தது. காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2- ஆம் தேதி 1975- ஆம் ஆண்டு காமராஜர் மறைந்தார்.

காமராஜரின் எளிமை, உதவும் எண்ணங்கள் ஆகியவை இன்றளவும் இளைஞர்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும், எழுச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. தனது வாழ்நாள் முழுவதும் நாட்டு மக்களுக்காக செலவழித்த காமராஜர், தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளவில்லை. ஏழை, எளிய மக்களின் தலைவராக திகழ்ந்தவர் காமராஜர். அவரது ஆளுமையைக் கண்டு வெளிநாட்டுத் தலைவர்கள் வியப்படைந்ததும் உண்டு.

காமராஜரின் நினைவுகள் குறித்து நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார் பகிர்ந்து கொண்டார். அதில், முதலமைச்சராக காமராஜர் பதவியேற்றுக் கொள்கிறார். அப்போது, அவரது தாய் சிவகாமி அம்மாள் வருகிறார். காமராஜர் உடனடியாக அம்மா என்ன வேண்டும் என கேட்க, சிவகாமி அம்மாள் திருப்பதி போய் பார்க்க வேண்டும் என்கிறார். அதைத் தொடர்ந்து, கார் மூலம் தனது தாயை திருப்பதி அனுப்பி வைத்தார். பின்னர் மீண்டும் சென்னைக்கு திரும்பிய தனது தாயை, விருதுநகருக்கு செல்லுமாறு கூறி அதற்கான ரயில் டிக்கெட்டை தயாராக வைத்திருந்தார். அதற்கு தாய் சிவகாமி அம்மாள், நீ தனியாய் இருக்கிறாய்; உணவுக்கு நான் சமைத்து தருகிறேன்; உன்னை விட்டு எப்படி தனியாக செல்லுவது என கூறினார்.

அதற்கு காமராஜர், எனக்கு உணவு செய்து கொடுக்க சமையல்காரர் இருக்கிறார். எனவே, நீங்கள் தங்கை உள்ளிட்டோரை அழைத்துக் கொண்டு விருதுநகருக்கு செல்லலாம் என்று கூறினார். முதலமைச்சராக பதவியேற்ற இரண்டாவது நாளிலே காமராஜர் அவ்வாறு கூறியது, அவரது எளிமையைக் காட்டுகிறது. இதனிடையே, விருதுநகரில் உள்ள காமராஜரின் இல்லத்தில் தனியாக தண்ணீர் குழாயை மாநகராட்சி அதிகாரிகள் பதித்தனர். இதனை கேள்விப்பட்ட காமராஜர் கோபமடைந்தார். அத்துடன், தண்ணீர் குழாயை உடனடியாக அகற்றுமாறும், பொதுக்குழாயில் எனது குடும்பத்தினர் தண்ணீர் பிடிக்கட்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தன்னை தாக்கிய சிறுத்தையின் கால்களை கட்டி பைக்கில் தூக்கிவந்த இளைஞர்

முதலமைச்சராக இருந்த போது தனது தாயாருக்கு காமராஜர் மாதந்தோறும் அனுப்பிய தொகை 120 ரூபாய் தான். காமராஜர் அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருந்த வெங்கட்ராமன் விருதுநகர் மாவட்டத்திற்கு சென்றிருந்த போது, சிவகாமி அம்மாள் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, மே மாதம் என்பதால் வெயில் அனல் பறக்க, சிவகாமி அம்மாள் பனை ஓலை விசிறியால் விசிறி கொண்டிருந்தார். இதைப் பார்த்த வெங்கட்ராமன், உடனடியாக தனது உதவியாளரிடம் ரூபாய் 250 கொடுத்து டேபிள் ஃபேன் வாங்கி வருமாறு கூறியுள்ளார்.

உதவியாளர் ஃபேனை வாங்கி வர வீட்டில் மாட்டினார். பின்னர், இந்த பட்டனை அழுத்தினால் ஃபேன் ஓடும் என்று சிவகாமி அம்மாளிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து, தூத்துக்குடி சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை செல்லும் வழியில் விருதுநகர் மாவட்டத்திற்கு சென்று தனது தாயை பார்க்க வீட்டிற்கு சென்ற காமராஜர், ஃபேன் இருப்பதைப் பார்த்து, இது எப்படி இங்கு வந்தது? யார் வாங்கிக் கொடுத்தார்? என்று கேள்வி எழுப்ப, அதற்கு சிவகாமி அம்மாளோ, கடந்த மாதம் வந்த வெங்கட்ராமன் தான் வாங்கிக் கொடுத்தார் என்றார்.

இதைக்கேட்டு கோபப்பட்ட காமராஜர், தமிழகத்தில் 10 லட்சம் பேர் வயதானவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் வெங்கட்ராமன் ஃபேன் வாங்கித் தருவாரா? என்று கேள்வி எழுப்பி, தனது அதிகாரியிடம் அந்த ஃபேனை அப்புறப்படுத்துமாறு அறிவுறுத்தினார். இவ்வாறு சிவக்குமார், காமராஜர் குறித்த நெகிழ்ச்சியான மற்றும் அவரது எளிமையான செயல்பாடுகளைப் பகிர்ந்துக் கொண்டார்.

MUST READ