Homeசெய்திகள்இந்தியாராகுல் காந்தியை சிறையில் தள்ள பாஜக ஆர்வம்

ராகுல் காந்தியை சிறையில் தள்ள பாஜக ஆர்வம்

-

ராகுல் காந்தியை சிறையில் தள்ள பாஜக ஆர்வம்

ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் குஜராத் மாநில சூரத் நீதிமன்றம் அளித்த தண்டனையை  அம்மாநில உயர்நீதி மன்றம் உறுதி செய்திருக்கிறது. இதனால் ராகுல் காந்திக்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது.

ராகுல் காந்தியை சிறையில் தள்ள பாஜக ஆர்வம்

கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி மோடியின் சமூகத்தை இழிவுப்படுத்தி பேசியதாக அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி…என்று அனைத்து திருடர்களின் பெயர்களிலும் எப்படி “மோடி” வருகிறது என்று ராகுல் பேசியிருந்தார். இந்த பேச்சு ஒரு சமுதாயத்தையே இழிவுப்படுத்தி விட்டதாக கூறி குஜராத் மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ பூர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை தண்டனையும்  15,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்பளித்தது. மேலும் அந்த தீர்ப்பில் மேல்முறையீடு செல்வதற்கு 30 நாள்கள் கால அவகாசம் வழங்கி தீர்ப்பை நிறுத்தி வைத்திருந்தது.

தீர்ப்பு வந்த மறுநாள் ராகுல் காந்தியின் எம்.பி.பதவியை பறித்து ஒன்றிய அரசு மகிழ்ச்சி அடைந்தது.

இந்த தீர்ப்புக்கு தடை கேட்டு ராகுல் காந்தி சார்பில் சூரத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்தனர். அந்த மனுவும் தள்ளுப்படி செய்யப்பட்டு, ஜாமீன் காலத்தை நீட்டிப்பு செய்தது.

அதனை தொடர்ந்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதனை விசாரணை நடத்திய நீதிமன்றம் கடந்த 7-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

அதில் ராகுல் காந்தி மீது 10 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்குக்கு பின்னரும் அவர் மீது மேலும் சில வழக்குகள் பதியப்பட்டுள்ளது. எனவே, சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது. அதில் தலையிட விரும்பவில்லை என்று மேல்முறையீட்டு மனுவை நீதிபதி ஹேமந்த் தள்ளுபடி செய்தார்.

அந்த தீர்ப்பைக் கண்டு சொரி, செரங்கு பிடித்தவன் நமச்சல் ஏற்படும் போதெல்லாம் சொரிந்து சொரிந்து மகிழ்ச்சி அடைவதுபோல் பாஜகவும் சந்தோஷம் அடைந்துக் கொண்டது.

ராகுல் காந்தி 2019-ல் கர்நாடகாவில் பேசியதற்காக குஜராத்தில் வழக்கு போடுகிறார்கள். கர்நாடகாவில் நீதிமன்றம் இல்லையா? எங்கே பேசினாரோ அந்த மாநிலத்தில் வழக்கை நடத்தாமல்  குஜராத்தில் நடத்த வேண்டிய காரணம் என்ன?

ராகுல் காந்தியை சிறையில் தள்ள பாஜக ஆர்வம்
ராகுல் காந்தி

குஜராத் மாநிலத்தை தாண்டி உச்சநீதி மன்றம் சென்றால் இந்த அவதூறு வழக்கு எடுபடாது என்ற நம்பிக்கையுடன் காங்கிரஸ் கட்சியினர் இருக்கிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு  இன்னும் 10 மாதங்கள் தான் உள்ளது. அதற்குள் ராகுல் காந்தியின் செயல்பாட்டை முடக்கி சிறைக்கு தள்ளிவிட வேண்டும் என்று பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

ஆனால் ராகுல் காந்தி யின் எம்.பி. பதவியை பறித்த பின்னர், அவர் மீது மக்களுக்கு அனுதாபம் கூடுதாலாகி விட்டது. இந்த நிலையில் அவரை சிறையில் அடைத்தால் என்ன ஆகும் என்று பாஜக தலைமை கணக்கு போடத் தொடங்கியுள்ளது.

MUST READ