தன்னை தாக்கிய சிறுத்தையின் கால்களை கட்டி பைக்கில் தூக்கிவந்த இளைஞர்
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் தன்னை தாக்கிய சிறுத்தையின்கால்களை கட்டி, பைக்கில் தூக்கி வந்த இளைஞரை கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஹாசன் மாவட்டம் பாகிவாலு கிராமத்தைச் சேர்ந்த முத்துவை 9 மாத சிறுத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைனர், சிறுத்தையின் கால்களை கட்டி, தனது மோட்டார் பைக்கில் வைத்துக்கொண்டு தனது கிராமத்திற்கு அழைத்து சென்றார். இதனை கண்ட கிராம மக்கள், இளைஞருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர். அதன்பின் இளைஞரிடமிருந்து சிறுத்தையை மீட்ட வனத்துறையினர் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்து பின்னர் வனத்தில் விட்டனர்.
தற்காப்புக்காகவே சிறுத்தையின் கால்களை கட்டிவைத்ததாக முத்து கூறியதை அடுத்து, வனத்துறையினர் அவரை தண்டிக்கவில்லை. ஆனால் முத்து சிறுத்தையை கையாண்ட விதம் தவறு என வனத்துறையினர் எச்சரித்துவிட்டனர்.