Homeசெய்திகள்இந்தியாதேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருடன் அஜித் பவார் திடீர் சந்திப்பு!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருடன் அஜித் பவார் திடீர் சந்திப்பு!

-

 

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருடன் அஜித் பவார் திடீர் சந்திப்பு!
File Photo

மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அஜித்பவார் திடீரென சந்தித்தது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை – ஜூலை 20 முதல் விண்ணப்பம்

அண்மையில் சரத் பவாருடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அஜித் பவார், தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் சிவசேனா- பா.ஜ.க. உடன் கூட்டணி அமைத்து துணை முதலமைச்சராகப் பதவியேற்றார். அதைத் தொடர்ந்து, அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில், மும்பையில் உள்ள சரத் பவாரின் இல்லத்திற்கு துணை முதலமைச்சர் அஜித் பவார் சென்றுள்ளார். சரத் பவாரின் மனைவி பிரதீபா அறுவைச் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ள சூழலில், அவரது உடல்நலம் குறித்து விசாரிக்கவே துணை முதலமைச்சர் அஜித் பவார் சென்றதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாரம் தாங்காமல் தலைகீழாக கவிழ்ந்த லாரி- வைரல் வீடியோ

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அஜித் பவார், துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு சரத் பவாருடன் சந்தித்திருப்பது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ