Homeசெய்திகள்தமிழ்நாடுபாரம் தாங்காமல் தலைகீழாக கவிழ்ந்த லாரி- வைரல் வீடியோ

பாரம் தாங்காமல் தலைகீழாக கவிழ்ந்த லாரி- வைரல் வீடியோ

-

பாரம் தாங்காமல் தலைகீழாக கவிழ்ந்த லாரி- வைரல் வீடியோ

புதுச்சேரியில் 25 டன் அலுமினியம் பவுடர் ஏற்றி வந்த லாரி, பாரம் தாங்காமல் வாய்காலில் தலை குப்புற விழும் பதை பதைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

லாரி

புதுச்சேரி அடுத்த லிங்காரெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாராயணமூர்த்தி. லாரி டிரைவரான இவர் மயிலத்தில் உள்ள சச்சிதானந்தம் என்பவருடைய லாரியில் வேலை செய்து வருகிறார். இவர் இரண்டு தினங்களுக்கு முன்பாக கும்மிடிப்பூண்டியில் அலுமினியம் பவுடரை ஏற்றி புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதிக்கு கொண்டு வந்துள்ளார். வரும் வழியில் லிங்கா ரெட்டி பாளையத்தில் வாய்க்கால் ஓரமாக லாரியை நிறுத்திவிட்டு தனது வீட்டிற்கு மதிய உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார்.

lorry

அப்போது வாய்க்கால் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாலும், லாரியின் பாரம் அதிகமாக இருந்ததாலும், மண்ணின் ஈரப்பதத்தின் காரணமாக வாய்க்காலில் லோடு லாரி சாய்ந்தது. சிறிது நேரம் சாய்ந்த நிலையில் இருந்த லாரி பாரம் தாங்காமல் தலை குப்புற முழுமையாக கவிழ்ந்து வாய்க்காலில் விழுந்தது. இதனை அறிந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

பின்பு கிரேன் இயந்திரம் மூலமாக லாரி தூக்கபட்டது. இதனால் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 25 டன் எடை கொண்ட அலுமினிய பவுடர் சேதம் அடைந்தது.

MUST READ