spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகேரளாவில் பலத்த மழை…நிலச்சரிவு ஏற்படும் அபாயம்…

கேரளாவில் பலத்த மழை…நிலச்சரிவு ஏற்படும் அபாயம்…

-

- Advertisement -

கேரளாவில் வடகிழக்கு பருமழை தீவிரமடைவதால், பலத்த மழை பெய்து வருகிறது. இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலா்ட்டும், 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலா்ட்டும், விடுக்கப்பட்டுள்ளது.கேரளாவில் பலத்த மழை…நிலச்சரிவு ஏற்படும் அபாயம்…கேரளா முழுவதும் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்நிலையில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, மலப்புரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல் திருவனந்தபுரம், பாலக்காடு, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில பகுதிகளில் மிக பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் மண் சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் மலையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை – மீன்வளத்துறை எச்சரிக்கை

MUST READ