- Advertisement -
வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக உள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
சுகாதாரத்துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

- தமிழ்நாட்டில் காய்ச்சல் அதிகமாக உள்ள பகுதியில் மருத்துவ முகாம்கள் நடத்த அமைக்கப்படும்.
- அவசரகால மருத்துவப் பணியாளர்கள் போதிய மருத்துவப் பொருட்களுடன் தயார் நிலையில் இருப்பார்கள்.
சுகாதாரத்துறை அறிவுரை:
- பிரசவ தேதியை நெருங்கும் கர்ப்பிணிகள் முன்கூட்டியே மருத்துவமனையில் சேர அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
- மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டர்கள் மழைநீரில் மூழ்காத வகையில் பாதுகாப்பாக வைக்கவும், மருத்துவமனைகளில் மருந்து பொருட்கள், மாத்திரைகள் தட்டுபாடு இல்லாமல் இருப்பு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- சுத்தமான குடிநீரை மட்டுமே குடிக்க வேண்டும்.
- பயணங்களின் போது கவனமாக இருக்க வேண்டும்.
- அவசரகால மருத்துவ உதவி தேவைப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.


