Homeசெய்திகள்தமிழ்நாடுகலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகள் கவனத்திற்கு!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகள் கவனத்திற்கு!

-

 

கேரளா, தெலங்கானா மாநிலங்களின் வரிசையில் இணைந்தது தமிழ்நாடு!
Photo: TN Govt

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கர்பா நடனம் ஆடிய 10 பேர் மாரடைப்பால் உயிரிழப்பு!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக் குறித்து சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், “மகளிர் உரிமைத்தொகைப் பெறும் பயனாளிகளின் வருமானம் குறித்த தரவுகளை மாதந்தோறும் ஆய்வுச் செய்யப்படும். வருமான உயர்ந்திருந்தால் நான்கு சக்கர, கனரக வாகனப்பதிவு, பத்திரப்பதிவுக் குறித்தும் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொழில் வரி செலுத்திய தரவுகள் மற்றும் மின்சார பயன்பாட்டுக்கான தரவுகள் ஆகியவை அரையாண்டுக்கு ஒருமுறை ஆய்வுச் செய்யப்படும். தானாக புதுப்பிக்கப்படுதல் மூலமாக நீக்கம் செய்யப்படும் பயனாளிகளுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும், அவர்கள் இணையதளம் வாயிலாக மேல்முறையீடு செய்யலாம்.

அதிதீவிரப் புயலாக வலுப்பெற்றது ‘தேஜ்’ புயல்!

ஆண்டுதோறும் காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் பயனாளிகளின் இறப்பு விவரங்களைப் பதிவுச் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ