spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகலைஞர் மகளிர் உரிமைத் தொகை- இன்று ஆலோசனை

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை- இன்று ஆலோசனை

-

- Advertisement -

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை- இன்று ஆலோசனை

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு வரும் 15 ஆம் தேதி தொடங்கப்படவுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

Kalaignar Magalir Urimai Thogai Thittam Application Form Pdf

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் 15-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் சுமார் 1 கோடிக்கு மேல் மகளிரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு செல்போன் வழியாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதேசமயம், கலைஞர் மகளிர் உரிமை தொகை வேண்டி விண்ணப்பித்த பலருக்கு வங்கி கணக்குகள் தொடங்கப்படாததால் அந்தந்த பகுதி ரேஷன் கடைகள் மூலம் வங்கி கணக்குகள் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

we-r-hiring

இந்நிலையில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு வரும் 15 ஆம் தேதி தொடங்கப்படவுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த திட்டத்தை முதலமைச்சர் காஞ்சிபுரத்தில் தொடங்கிவைக்க உள்ள நிலையில், இறுதி ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இத்திட்டத்தில் பயனாளிகளுக்கு பிரத்யேக ஏடிஎம் கார்டுகளை வழங்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

 

 

MUST READ