கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 56- பேர் உயிரிழந்த சூழலில், 50-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் நேரில் சந்தித்து அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சை விபரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டு அறிந்தார்.
இதனைத்தொடர்ந்து இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன், குடிக்காதே என்று சொல்ல முடியாது, அளவோடு குடி என்று வேண்டுமானால் சொல்லலாம் மேலும் இதன் தொடர்பாக ”“டாஸ்மாக் அருகிலேயே விழிப்புணர்வு பதாகைகளை வைக்க வேண்டும். என இவ்வாறு அவர் பேசினார்.