
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி முன்னிலை வகித்து வருகின்றனர்.

18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் ஜூன்1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்தன. 96 கோடி வாக்காளர்களில் 64 கோடி பேர் தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றினர். மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்த நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி முன்னிலை வகித்து வருகின்றனர். திமுக வேட்பாளர் கனிமொழி 25,447 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 6,127 வாக்குகளும், பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜயசீலன் 4,830 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ரோவெனா ருத் ஜென் 4,398 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
