
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை நான்காவது நாளாக நீடித்து வரும் நிலையில், இன்று (அக்.03) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
“ரிசர்வ் வங்கி: வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்காது”!
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, பூதப்பாண்டி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அணைகளுக்கு தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளது.
நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான தோவாளை, ஆரல்வாய்மொழி உள்ளிட்ட பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய இரவு நேரத்தில் கனமழை பெய்தது. நாகர்கோவில் நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கூடல் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலை உருவாகியுள்ளது.
காவிரி விவகாரத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்.03) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.