
கரூர் மாவட்டத்தில் நேற்று (ஜூன் 23) ஒரே நாளில் அடுத்தடுத்து ஏழு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஐந்து மணி நேரத்தில் ரூபாய் ஐந்து கோடிக்கு ஆடுகள் விற்பனை!
அதன்படி, பிரபல உணவகமான சக்தி மெஸ் உணவகத்தின் உரிமையாளர்கள் கார்த்திக், ரமேஷ் ஆகியோரின் வீடுகள், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர், அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் என்பவரின் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.
எஸ்.கே.பில்டர்ஸ் பொறியாளர் பாஸ்கரின் அலுவலகம், ஆடிட்டரின் அலுவலகம், பழனி முருகன் நகை கடையிலும் அடுத்தடுத்து வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. மற்ற இடங்களில் சோதனை நிறைவடைந்த நிலையில், நகைக்கடையில் மட்டும் தற்போது வரை சோதனையானது நடைபெற்று வருகிறது.
ஆமைகளைக் கடத்தி வந்த இருவர் கைது- சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை!
வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.