Homeசெய்திகள்தமிழ்நாடுகேந்திரிய வித்யாலயா பள்ளி வளாகத்திற்குள் சிறுவனை கடித்து குதறிய நாய்....!

கேந்திரிய வித்யாலயா பள்ளி வளாகத்திற்குள் சிறுவனை கடித்து குதறிய நாய்….!

-

- Advertisement -

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி வளாகத்திற்கு உள்ளேயே 9 வயது சிறுவனை நாய் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி திருவள்ளுவர் நகர் துளசி தெருவில் வசித்து வரும் கணேஷ் என்பவரின் மகன் தேஜஸ்வன்(9). மத்திய அரசுக்கு சொந்தமான கேந்திரியா வித்யாலயா பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம் போல் இன்று பள்ளிக்கு சென்ற சிறுவனுக்கு பள்ளி வளாகத்திற்கு உள்ளேயே நாய் ஒன்று துரத்தி வெறித்தனமாக கடித்துள்ளது, இதனால் சிறுவன் கதறி அழுத நிலையில், அந்த சிறுவனை மீட்ட ஆசிரியர்கள் ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இது குறித்து உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், பள்ளி வளாகத்திற்குள்ளேயே நாய் கடித்ததை கேட்டு ஆத்திரமடைந்துள்ளார் அந்த மாணவனின் தந்தை. இதனிடையே ஆவடி மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர் கூட்டம் நடைபெறுவதை அறிந்த மாணவனின் தந்தை, உடனடியாக மாநகராட்சிக்கு வந்து மகனுக்கு நேர்ந்த துயர சம்பவத்தை பதிவு செய்து நாய்களை உடனடியாக பிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தார். ஆனால் கூட்டம் நடைபெறும் வளாகத்திற்குள் அனுமதி மறுக்கப்படுவே பின்பு ஆவடி சுகாதார அதிகாரியிடம் மனு அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சிறுவனின் தந்தை கணேஷ் கூறியதாவது: ஆவடியில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. எனது மகன் இன்று காலை பள்ளிக்கு சென்றபோது பள்ளி வளாகத்திற்கு உள்ளேயே நாய் கடித்து அவதிபட்டுள்ளார். இந்த நிலை மற்றவருக்கு ஏற்படாமல் இருக்க தற்போது மாமன்ற கூட்டத்தில் இதனை பதிவு செய்ய வந்தேன். ஆனால் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படாததால் சுகாதார அதிகாரியிடம் மனு அளித்து செல்கிறேன். தயவுசெய்து நாய்களின் தொல்லையிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.

 

MUST READ