உள்நாட்டுச் சந்தையில் சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்தவும், போதுமான இருப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய அரசு அதிரடியாக சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.
உள்நாட்டில் சர்க்கரை விலையை கட்டுக்குள் வைத்திருக்க ஒன்றிய அரசு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சர்க்கரை ஏற்றுமதிக்கு வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை, அல்லது மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவு உள்நாட்டு சந்தையில் சர்க்கரை பற்றாக்குறை ஏற்படாமல் தடுப்பதற்கும், விலையேற்றத்தை கட்டுப்படுத்துவதற்குமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வறட்சி மற்றும் காலநிலை மாற்றங்களால் கரும்பு உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அடுத்த சில மாதங்களில் சர்க்கரை உற்பத்தி குறையக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது. இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, உள்நாட்டு தேவைக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இந்தியாவுடன் செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்காவுக்கு மட்டும் இந்த தடையில் இருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அந்த நாடுகளுக்கு ஏற்கனவே ஒப்பந்தமான அளவில் சர்க்கரை ஏற்றுமதி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலுக்கு அடுத்தபடியாக உலகளவில் அதிகளவு சர்க்கரை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா திகழ்கிறது. இந்நிலையில், மத்திய அரசின் இந்த தற்காலிக தடை சர்வதேச சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தங்கம் மீதான வரி உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் – காங்கிரஸ் கண்டனம்
