Homeசெய்திகள்தமிழ்நாடுகலைஞர் மகளிர் உரிமைத் தொகை- இணையதளம் முடக்கம்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை- இணையதளம் முடக்கம்

-

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை- இணையதளம் முடக்கம்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விபரங்களை தெரிந்துக்கொள்ள தமிழக அரசால் தொடங்கப்பட்ட இணைய பக்கம் முடங்கியுள்ளது.

Image

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1 கோடியே 6 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 57 லட்சம் பயனாளிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.2.5 லட்சத்திற்கு கீழ் வருமானம் உள்ள குடும்பங்கள், 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்திருக்கும் குடும்பங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிப்பு, மீண்டும் விண்ணப்ப பதிவு உளிட்டவை குறித்து உதவி மையத்தை அணுகி தீர்வு காணலாம் அல்லது மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பத்தின் நிலையை பிரத்யேக இணையதளத்தில் பார்க்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதற்காக பிரத்யேக http://kmut.tn.gov.in என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விபரங்களை தெரிந்துக்கொள்ள தமிழக அரசால் தொடங்கப்பட்ட இணைய பக்கம் முடங்கியுள்ளது. பொதுமக்கள் யாரும் இணைய பக்கத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால், மக்கள் விரக்தியடைந்துள்ளனர். http://kmut.tn.gov.in என்ற இணையதளத்தை ஒரே நேரத்தில் பலரும் பயன்படுத்தியதால் சர்வர் முடங்கியது.

MUST READ