Homeசெய்திகள்தமிழ்நாடுகொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு: மு.க.ஸ்டாலின் மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்!

கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு: மு.க.ஸ்டாலின் மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்!

-

- Advertisement -

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி, முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

we-r-hiring

வழக்கின் பின்னணி:

கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், 2-வது இடம் பிடித்த மு.க.ஸ்டாலின் கோரிக்கையின்படி 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி.வி.பேட் சீட்டுகள் சரிபார்க்கப்பட்டன. அப்போது சில இயந்திரங்களில் கோளாறுகள் ஏற்பட்டதாகவும், 6 வாக்குச்சாவடிகளில் வாக்கு இயந்திரங்கள் மற்றும் வி.வி.பேட் சீட்டுகளை ஒப்பிட்டுப் பார்த்ததில் முறைகேடுகள் கண்டறியப்பட்டதாகவும் குற்றம் சாட்டி உயர் நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் மனுத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், அனைத்து இயந்திரங்களையும் மீண்டும் சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என்றும், தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவின் வெற்றியைச் செல்லாது என அறிவித்து தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

நீதிமன்றத்தில் கடுமையான விவாதம்:

தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் நடைபெற்ற இந்த விசாரணையில் இருதரப்பிலும் காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டன:

  • மு.க.ஸ்டாலின் தரப்பு வாதம்: “தேர்தல் முடிவுகள் வெளியான 3 நாட்களிலேயே (மே 7) இயந்திரங்களைச் சரிபார்க்க விண்ணப்பித்தோம். ஆனால், தேர்தல் வழக்கு தொடர்வதற்கான 45 நாட்கள் காலக்கெடு முடிந்த பிறகே சரிபார்ப்பு நடந்தது. இதனால் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை” என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார்.

  • தேர்தல் ஆணையம் தரப்பு வாதம்: “இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. எம்.எல்.ஏ-வின் வெற்றியை எதிர்த்துத் தேர்தல் வழக்கு (Election Petition) மட்டுமே தாக்கல் செய்ய முடியும். இதை ஏற்றுக் கொண்டால் தொடர் வழக்குகள் வரக்கூடும்” என வாதிடப்பட்டது.

தீர்ப்பு தள்ளிவைப்பு & புதிய மனுவிற்கு அனுமதி:

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனு மீதான தீர்ப்பைத் தள்ளிவைத்தனர்.

மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்ப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளில் 2025-ல் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டதை தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியதால், தற்போதைய வழக்கை திரும்பப் பெற்று புதிய மனுத் தாக்கல் செய்ய ஸ்டாலின் தரப்பு அனுமதி கோரியது. அதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.

தவெக கூட்டணியில் விசிக: ‘தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டு மலர்’ வெளியீட்டு விழாவில் திருமாவளவனுக்கு அபூர்வப் பரிசு!

MUST READ