இலக்கு நிர்ணயித்து மது விற்பனை செய்யப்படவில்லை; 603 கடைகள் மூடப்பட்டுள்ளன: டாஸ்மாக் விவாதத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, டாஸ்மாக் கடைகள் மற்றும் வருவாய் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

எதிர்க்கட்சி உறுப்பினர் குற்றச்சாட்டு விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர் வெங்கடரமணன், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் கடைகளில் இவ்வளவு கோடி ரூபாய் விற்பனை செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து மது விற்பனை செய்யப்பட்டது எனக் கடுமையான குற்றச்சாட்ட முன்வைத்தார்.
செந்தில் பாலாஜி பதில் இதற்கு உடனடி பதிலடி கொடுத்துப் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி: டாஸ்மாக் நிறுவனத்தில் ஒருபோதும் இலக்கு நிர்ணயித்து மது விற்பனை செய்யப்படவில்லை.
கடைகளின் எண்ணிக்கையைக் கூட்டுவதாலோ அல்லது குறைப்பதாலோ மட்டும் அரசின் வருவாய் பெருகிவிடாது. மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டதன் காரணமாகவே டாஸ்மாக் வருவாய் அதிகரித்தது.
திமுக ஆட்சியின் 5 ஆண்டு காலத்தில் மட்டும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு 603 மதுக்கடைகள் அதிகாரப்பூர்வமாக மூடி பூட்டப்பட்டுள்ளன என்று புள்ளிவிவரங்களுடன் விளக்கமளித்தார்.
கே.என்.நேரு – ஆதவ் அர்ஜுனா காரசாரம்தொடர்ந்து பேசிய தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கனிம வளத்துறை மற்றும் டாஸ்மாக் ஆகிய துறைகளில் தான் அதிக அளவிலான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன என்று சாடினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு: தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை முதன்முதலில் தொடங்கியதும் திமுக தான்; பின்னர் மக்களின் கோரிக்கையை ஏற்று அதை மூடியதும் திமுக தான். ஆனால், அதற்குப் பிறகு வந்த ஆட்சியாளர்கள் தான் மதுக்கடைகளை மீண்டும் திறந்து தொடரச் செய்தார்கள் என்று வரலாற்று நிகழ்வுகளை சுட்டிக்காட்டி காரசாரமாகப் பதிலளித்தார்.
இவ்வாறாக, டாஸ்மாக் கடைகள் மூடல், வருவாய் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்துச் சட்டப்பேரவையில் நடைபெற்ற இந்த விவாதம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
