Homeசெய்திகள்தமிழ்நாடுகிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்து: அதிமுக எம்பி- மத்திய அமைச்சர் இடையே காரசாரமான வாதம்

கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்து: அதிமுக எம்பி- மத்திய அமைச்சர் இடையே காரசாரமான வாதம்

-

கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்து: அதிமுக எம்பி- மத்திய அமைச்சர் இடையே காரசாரமான வாதம்

கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்து விவகாரத்தில் அதிமுக எம்.பி தம்பிதுரை – மத்திய அமைச்சர் இடையே மாநிலங்களவையில் காரசாரமான வாதம் நடந்தது.

Image

இதுதொடர்பாக அதிமுக எம்.பி தம்பிதுரை பேசுகையில், “கிருஷ்ணகிரியில் கேஸ் சிலிண்டர் வெடித்ததன் காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர், 15 பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? நிவாரண நிதியை உடனடியாக மத்திய அரசு அவர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் இதில் தமிழக அரசு சிலிண்டர் வெடிப்பால் இச்சம்பவம் நிகழ்ந்ததா அல்லது பட்டாசு குடோனால் நிகழ்ந்ததா என்பதை விசாரிக்க தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தவிடுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.

தம்பிதுரை

இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “நாங்கள் இதுபற்றி விசாரித்தோம். அங்கு சிலிண்டர் விநியோகமே நடக்கவில்லை. மரணத்திற்கு கேஸ் சிலிண்டர் வெடிப்பு காரணமாக இருக்காது. பட்டாசு குடோன் வெடி விபத்து என்று தமிழக அமைச்சரே பதிலளித்துள்ளார். குடியிருப்புகள் உள்ள பகுதியில் எதற்காக பட்டாசு குடோன் அமைக்க அனுமதி தந்தார்கள் என்று தெரியவில்லை. இதுகுறித்து தகவல் தெரிந்ததும், பிரதமர் மோடி நிவாரண நிதியும் அளித்துள்ளார் என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன். குடியிருப்பு பகுதியில் ஒரு பட்டாசு குடோன் உள்ளது எனில், அதற்கு முறையான அனுமதி பெற்றிருக்க முடியாது. எப்படி அனுமதி பெறாத ஒரு பட்டாசு குடோனை அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. நிச்சயமாக தமிழக அரசிடம் இதுபற்றி விசாரிக்க கோருவோம். தேசிய அளவில் இன்றைக்கு 32 கோடி மக்கள் கேஸ் சிலிண்டர் பயன்படுத்தி வருகிறார்கள். எங்கும் திடீரென இப்படி விபத்து நிகழவில்லை” என்றார்.

MUST READ