கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் தனியார் பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி, மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். மாணவி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியான நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில், மறைந்த சிவராமனின் கூட்டாளியான காவேரிப்பட்டிணத்தை சேர்ந்த ரவி என்பரை போலிசார் இன்று கைது செய்தனர். வழக்கு விசாரணையில் சிவராமனுக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்ததையடுத்து ரவியை போக்சோ சட்டத்தின் கீழ் சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர். இதனால் இந்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைதானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.