spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஓட்டுநரின் அலட்சியம்… சாலையோரமாக நின்றிருந்த பெண்கள் பரிதாபமாக பலி…

ஓட்டுநரின் அலட்சியம்… சாலையோரமாக நின்றிருந்த பெண்கள் பரிதாபமாக பலி…

-

- Advertisement -

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நான்கு வழிச் சாலை சந்திப்பில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.ஓட்டுநரின் அலட்சியம்… சாலையோரமாக நின்றிருந்த பெண்கள் பரிதாபமாக பலி…கோவைதிருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகரம் அமைந்துள்ளது. எப்போதும் அதிக வாகனத்துடனே பல்லடம் நகரம் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் கோவையிலிருந்து பல்லடம் நோக்கி இன்று மதியம் 2 மணியளவில் கண்டெய்னர் லாரி ஒன்று வந்த கொண்டிருந்தது. கோவைதிருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து நான்கு வழிச் சாலை அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, லாரி நகராட்சி அலுவலகம் முன்பு தலைகீழாக விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் சாலை ஓரமாக நகராட்சி அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்த இரண்டு பெண்கள் கண்டெய்னர் அடியில் சிக்கி கொண்டு உயிரிழந்தனா்.

கண்டெய்னர் அதிக பாரத்தோடு இருந்ததால், மூன்று கிரேன்களின் உதவி மூலம் கண்டெய்னர் கவிழ்ந்து சிக்கிய பெண்களின் உடலை மீட்கும் பணியில் காவல்துறையினா் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தால், கோவைதிருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் அதிகளவு கூடியதால் போக்குவரத்துக்கு நெரிசல் அதிகரித்து காணப்பட்டது. இதனையடுத்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும் முயற்சியில் காவல் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். திருப்பூர் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் இறந்த பெண்கள் பல்லடத்தை சேர்ந்த மகாராணி மற்றும் கிரிஜா என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க் கொண்டு வருகின்றனா்.

புதிய செயலியுடன் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் – தமிழக அரசு

we-r-hiring

MUST READ