காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் மினி லாரியில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட சுமார் 1425 கிலோ தங்ககட்டிகளை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
நாடாளுமன்ற தேர்தலானது தமிழகத்தில் வருகின்ற 19- ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு உள்ளிட்ட பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களில் கொண்டு செல்பவர்களிடம் பறிமுதல் செய்து வருகின்றனர். இதற்கான தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் அதிகாரிகள் இரவு பகல் என முழு நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த மினி லாரி ஒன்று வந்துள்ளது. அந்த லாரியை அதிகாரிகள் சோதனையிட்ட போது சுமார் தங்ககட்டிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் சுமார் 1425 கிலோ தங்கக் கட்டிகள் இருந்துள்ளது. இதனையடுத்து உரிய ஆவணமில்லாமல் எடுத்து வரப்பட்ட தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். இந்த சோதனையானது வண்டலூர்- மீஞ்சூர் வெளியிட்ட சாலை மேம்பாலம் அருகே நடந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.