Homeசெய்திகள்தமிழ்நாடுமின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது - நீதிமன்றத்தில் வழக்கு

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது – நீதிமன்றத்தில் வழக்கு

-

மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரணை செய்து வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 19ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது .

வீட்டு உரிமையாளரின் ஆதாரை மட்டுமே இணைக்க முடியும் என்பதால், அரசின் மானியம் வாடகைதாரருக்கு கிடைக்காது என்றும், ஆதாரை இணைப்பது தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலை பெறவில்லை என்றும் தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி வழக்கு பதிவு செய்துள்ளார்.

வாடகைதாரர்கள் மானியம் பெறும் விஷயம் என்பது உரிமையாளருக்கும், வாடகைதாரருக்கும் இடையிலான பிரச்சினை. மீட்டர் அடிப்படையில் தான் ஆதார் இணைக்கப்படும். அனைத்து ஒப்புதல்களையும் பெற்ற பிறகே ஆதார் இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என்று டான்ஜெட்கோ தெரிவித்துள்ளது.

MUST READ