spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமக்களவைத் தேர்தல் 2024- தமிழகத்தில் 950 பேர் போட்டி!

மக்களவைத் தேர்தல் 2024- தமிழகத்தில் 950 பேர் போட்டி!

-

- Advertisement -

 

மக்களவைத் தேர்தல் 2024- தமிழகத்தில் 950 பேர் போட்டி!

we-r-hiring

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது லக்னோ அணி!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 28- ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அன்றைய தினம் வரை 39 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட 1,085 பேர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். மார்ச் 29- ஆம் தேதி வேட்பு மனு மீதான பரிசீலனை நடந்த நிலையில், 135 பேர் வேட்பு மனுவைத் திரும்பப் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் 950 பேர் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதிப் பட்டியலின்படி தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் மக்களவைத் தொகுதியில் 54 பேர் போட்டியிடுகின்றனர்.

பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்த லக்னோ அணி!

குறைந்தபட்சமாக நாகையில் 9 பேர் களம் காண்கின்றனர். இதில் 774 ஆண் வேட்பாளர்களும், 76 பெண் வேட்பாளர்களும் அடங்குவர். புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் சுமார் 26 பேர் போட்டியிடுகின்றனர்.

MUST READ