Homeசெய்திகள்தமிழ்நாடு"தேர்தல் நியாயமாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம்"- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

“தேர்தல் நியாயமாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம்”- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

-

 

"தேர்தல் நியாயமாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம்"- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

விருப்பு வெறுப்பின்றி தேர்தல் நியாயமாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளராக உருவெடுத்த இளம் நடிகை……உதவிக் கரம் நீட்டிய எஸ்.ஜே. சூர்யா!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொடர்பாக, சென்னையில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “வாக்காளர் பட்டியலில் உள்ள முரண்பாடு, குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்று முறையிட்டோம். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புடன் சிசிடிவி கண்காணிப்பு தேவையென வலியுறுத்தப்பட்டது.

சுந்தர். சி படத்தில் நடிக்க கவின் கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

வாக்குச்சாவடிகளில் உள்ளூர் போலீசாருக்கு பதில் துணை ராணுவத்தினரை நிறுத்த வேண்டும். விருப்பு வெறுப்பின்றி தேர்தல் நியாயமாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம். மக்களவைத் தேர்தல் தொடர்பான அ.தி.மு.க.வின் கருத்துகளை எழுத்துப்பூர்வமாக அளித்துள்ளோம். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்தப்பட்டது” எனத் தெரிவித்தார்.

MUST READ