
மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், ஒரேநாளில் தமிழகம் முழுவதும் 1,847 காவல்துறையினர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தள்ளிப் போகிறதா சூர்யாவின் புறநானூறு படப்பிடிப்பு?
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக காவல்துறை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தார். காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், பணியிட மாற்றம் தொடர்பான பட்டியலைத் தயாரிக்க டி.ஜி.பி. உத்தரவிட்டிருந்தார்.
சினிமாவில் அறிமுகமாகும் விஜயகாந்தின் மூத்த மகன்….. எந்த படத்தில் தெரியுமா?
அதன்படி, சொந்த ஊரில் மற்றும் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளாகப் பணிபுரியும் காவலர்கள் பட்டியலை தயாரித்து அனுப்புமாறு சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தியிருந்தார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் உள்பட 1,847 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.