Homeசெய்திகள்சினிமாசினிமாவில் அறிமுகமாகும் விஜயகாந்தின் மூத்த மகன்..... எந்த படத்தில் தெரியுமா?

சினிமாவில் அறிமுகமாகும் விஜயகாந்தின் மூத்த மகன்….. எந்த படத்தில் தெரியுமா?

-

- Advertisement -

சினிமாவில் அறிமுகமாகும் விஜயகாந்தின் மூத்த மகன்..... எந்த படத்தில் தெரியுமா?மறைந்த நடிகர் விஜயகாந்த், சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி தனி முத்திரை பதித்தவர். அதே சமயம் சினிமா அரசியலை தாண்டி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவரின் இழப்பு தமிழகத்தின் பேரிழப்பாகும். இந்நிலையில் தான் கடந்த 1986 இல் வெளியான ஊமை விழிகள் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஆபாவாணன் உருவாக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

விஜயகாந்தின் சிறந்த படங்களில் ஊமை விழிகள் திரைப்படமும் ஒன்று. ஊமை விழிகள் படத்தில் DSP தீனதயாளன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார் விஜயகாந்த். அதே சமயம் அவர் வாழ்ந்த காலத்தில் திரை துறைக்கு ஏராளமான நன்மைகளை செய்ததில் ஊமை விழிகள் திரைப்படத்தில் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களின் வாழ்க்கையை மரியாதைக்குரிய பாதையில் பயணிக்க செய்தார்.

விஜயகாந்தின் மறைவிற்குப் பின் ஆபாவாணன், ஊமை விழிகள் 2 படத்தில் நடிகர் விஜயகாந்தை உயிர் பெறச் செய்யப் போவதாக திரைப்படக் கல்லூரி மாணவர்களிடம் கூறியிருந்தார். தற்போது இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. சினிமாவில் அறிமுகமாகும் விஜயகாந்தின் மூத்த மகன்..... எந்த படத்தில் தெரியுமா?அதாவது விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் இப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாக உள்ளாராம். மேலும் இவருடன் இணைந்து நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன், சகாப்தம், மதுர வீரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ