spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிடுவேன்"- தொல்.திருமாவளவன் எம்.பி. அறிவிப்பு!

“சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிடுவேன்”- தொல்.திருமாவளவன் எம்.பி. அறிவிப்பு!

-

- Advertisement -

 

"சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிடுவேன்"- தொல்.திருமாவளவன் எம்.பி. அறிவிப்பு!

we-r-hiring

வரும் மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிடுவேன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

திமுக அரசை கண்டித்து அதிமுக வருகிற 04ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., “தி.மு.க.வுடன் விரைவில் தொகுதி உடன்பாடு ஏற்படும்; ஒரு பொதுத்தொகுதி உள்பட நான்கு தொகுதிகளைக் கேட்டுள்ளோம். என் சொந்த தொகுதியான சிதம்பரத்தில் தான் போட்டியிடுவேன்; சந்தேகமே வேண்டாம். பா.ஜ.க.வை விட்டு அ.தி.மு.க. தனியாகப் பிரிந்து வந்தாலும் அ.தி.மு.க,வை பா.ஜ.க. விடுவதாக இல்லை.

அ.தி.மு.க.வை மூன்றாம் இடத்திற்கு தள்ளி அதனை பலவீனப்படுத்தும் முயற்சியில் பா.ஜ.க. உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினரிடம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – ஈபிஎஸ்

தி.மு.க.- விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் இடையே மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ