இந்து சமய அறநிலையத் துறையினால் மறுபதிப்பு செய்யப்பட்ட 108 அரிய பக்தி நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

மறு பதிப்பு செய்யப்பட்ட 108 அரிய பக்தி நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர் பாபு, சட்டமன்ற உறுப்பினர் எழிலன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சாந்த லிங்க மருதாச்சல அடிகளார், அறநிலையத்துறை செயலாளர் சந்திர மோகன், ஆணையர் குமர குருபரன் ஆகியோர் பங்கேற்றனர்.

குறிப்பாக, திருப்புகழ், தேவாரம், பெரிய புராண கதைகள், வள்ளலாரின் அற்புதங்களும் மருத்துவமும், சித்தர்கள் கண்ட விஞ்ஞனாம், திருப்பாவை திருவெண்பாவை, கந்தரனுபூதி, உள்ளிட்ட 108 அறிய பக்தி நூல்கள் இந்து சமய அறநிலையதுறையால் மறு பதிப்பு செய்து நூலாக்கமும் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து அறநிலையதுறையில் பணிபுரிந்து, பணியின்போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர், பக்தி நூல் விற்பனை மையத்தையும் திறந்து வைத்தார்.
