Homeசெய்திகள்தமிழ்நாடுஎரியும் நெருப்பில் குளிர் காய நினைக்கிறார் இபிஎஸ் - அமைச்சர் ஆவேசம்!

எரியும் நெருப்பில் குளிர் காய நினைக்கிறார் இபிஎஸ் – அமைச்சர் ஆவேசம்!

-

- Advertisement -

கண்டெய்னர் பெட்டியில் பிரியாணி கடை

கள்ளக்குறிச்சி விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்குள்ள மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு என எடப்பாடி பழனிசாமி பொய் பேசி வருவதாக அமைச்சர் .மா.சுப்பிரமணியன் குற்றாம்சாட்டியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றெரிச்சல், கை-கால் மருத்துபோதல், கண் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பலரும் அருகிலுள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 30-க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக சேலம், புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டவர்கள் மற்றும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களும் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். இதுவரை 52 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனிடையே மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருந்தார்.

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 47 பேர் பலி

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், எடப்பாடி பழனிசாமியின் பேச்சு எரியும் நெருப்பில் குளிர் காய்வது போல உள்ளது. Omerprazole மருத்து மருத்துவமனைகளில் கையிருப்பு இல்லை என என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் 4.42 கோடி மருத்துகள் கையிருப்பில் உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் பேச்சு பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

MUST READ