spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுரயிலில் 30 கிலோ போதைப்பொருள் கடத்தி வந்த நபர் மதுரையில் கைது!

ரயிலில் 30 கிலோ போதைப்பொருள் கடத்தி வந்த நபர் மதுரையில் கைது!

-

- Advertisement -

மதுரை வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் 30 கிலோ மெத்தபெட்டமைன் போதை பொருளை கடத்தி வந்த சென்னையை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

we-r-hiring

சென்னையில் இருந்து தென்காசி மாவட்டம் செங்கோட்டை நோக்கி பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் சென்னையை சேர்ந்த பயணி ஒருவர் போதைப் பொருள் கடத்தி வருவதாக ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மதுரை வந்தடைந்த பொதிகை ரயிலில் உள்ள பயணிகளின் உடைமைகளை போலீசார் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது பயணி ஒருவரின் உடைமைகளை சோதனை செய்ததில் அதில் 30 கிலோ போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. மெத்தபெட்டமைன் எனும் போதை பொருளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 30 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த போதைப் பொருளின் மதிப்பு பல கோடி ரூபாய் மதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து போதைப் பொருளை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அந்த நபர் சென்னையை சேர்ந்த சிலமன் பிரகாஷ் என்பது தெரியவந்துள்ளது. சிலமன் பிரகாஷிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ