Homeசெய்திகள்தமிழ்நாடுசட்டப்பேரவையில் மருத்துவத் துறைக்கு முக்கிய அறிவிப்புகள்! 

சட்டப்பேரவையில் மருத்துவத் துறைக்கு முக்கிய அறிவிப்புகள்! 

-

- Advertisement -

பெரம்பூரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை — புதிய திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!  தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்ந்த பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் கட்டமைப்பு மேம்பாடுகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.சட்டப்பேரவையில் மருத்துவத் துறைக்கு முக்கிய அறிவிப்புகள்! 

பெரம்பூரில் ரூ.300 கோடியில் புதிய பன்னோக்கு மருத்துவமனை:
வடசென்னை பகுதி மக்களுக்கு உயர்தர சிறப்பு மருத்துவ சேவைகள் எளிதாகக் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், சென்னை பெரம்பூரில் ரூ.300 கோடி செலவில் 400 படுக்கைகள் கொண்ட அதிநவீன பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை (Multi-Speciality Hospital) அமைக்கப்படும்.

we-r-hiring

புற்றுநோய் சிகிச்சை மற்றும் பராமரிப்புக்கான பிரம்மாண்டத் திட்டங்கள்:
புற்றுநோயைக் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து தீவிர சிகிச்சை அளிப்பதற்காகச் சிறப்பு நிதி ஒதுக்கீடுகளுடன் புதிய மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன:

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை:
தலைநகரில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.471.80 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை பிரிவு (Integrated Cancer Care Centre) புதிதாக அமைக்கப்படவுள்ளது.புற்றுநோய் பராமரிப்பு இயக்கம்:மாநிலம் தழுவிய அளவில் செயல்பட்டு வரும் ‘முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம்’ ரூ.673.44 கோடி மதிப்பீட்டில் மேலும் விரிவுபடுத்தப்பட்டு மேம்படுத்தப்படும்.

மதுரை ராஜாஜி மருத்துவமனை:
தென் தமிழக மக்களின் மருத்துவத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ரூ.84 கோடி செலவில் புதிய மண்டல புற்றுநோய் மையம் (Regional Cancer Centre) தொடங்கப்பட உள்ளது.

மருத்துவக் கல்வி மற்றும் செவிலியர் பயிற்சி மேம்பாடு:
மருத்துவக் கல்வியை வலுப்படுத்தவும் செவிலியர் பயிற்சிகளை விரிவுபடுத்தவும் கூடுதல் இடங்கள் மற்றும் புதிய கல்லூரிகள் அறிவிக்கப்பட்டுள்ளன

கூடுதல் இடங்கள் உருவாக்கம்:
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.351 கோடி நிதியொதுக்கீடு செய்யப்பட்டு, கூடுதலாக 6,098 மருத்துவ இடங்கள் உருவாக்கப்படவுள்ளன.புதிய செவிலியர் கல்லூரிகள்:

செவிலியர் படிப்புகளுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மாநிலத்தில் 7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் (Government Nursing Colleges) விரைவில் தொடங்கப்பட உள்ளன.அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை தடைகளின்றிச் சென்றடைவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிரான திராவிடர் கழக வாகனப் பேரணிக்கு நாளை அனுமதி வழங்கப்படும்!

MUST READ