
மணலி, எண்ணூர் பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான புதிய திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அயலான் ஸ்டைலில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
மாசு சுமை, கழிவுகள், பறக்கும் சாம்பல் வெளியேற்றம் மற்றும் நீர் நிலைகளில் நீரின் தரத்தைக் கண்காணிக்க மாசு கண்காணிப்பு மற்றும் கட்டளை மையத்தை அமைக்க முடிவுச் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு உதவியாக மணலி, எண்ணூர் பகுதிகளில் பிரத்யேகமாக இரண்டு பறக்கும் படைகள் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாசுக் கண்காணிப்பு மற்றும் கட்டளை மையம் ஒரு அவசரகால நடவடிக்கைக்குட்பட்டக் குழுவை அமைக்கும் என்றும், இது வழக்கமான மாதிரி பயிற்சிகள், சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
லால் சலாம் படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு
அனைத்து சிவப்பு வகை தொழிற்சாலைகளின் பாதுகாப்புத் தணிக்கையை தொழில் பாதுகாப்பு இயக்குநரகம் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனம் ஒன்றின் மூலம் மேற்கொள்ளும் என்றும், கத்திவாக்கத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் 10 படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்படும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் இருந்து சாம்பல் அணைக்கட்டுக்கு ஈரமான சாம்பலை எடுத்துச் செல்லும் குழாய்கள் புதுப்பிக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.