spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபரமக்குடியில்‌ தியாகி இம்மானுவேல்‌ சேகரனாருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம்- மு.க.ஸ்டாலின்

பரமக்குடியில்‌ தியாகி இம்மானுவேல்‌ சேகரனாருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம்- மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

பரமக்குடியில்‌ தியாகி இம்மானுவேல்‌ சேகரனாருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம்- மு.க.ஸ்டாலின்

ராமநாதபுரம் மாவட்டம்‌ தியாகி இம்மானுவேல்‌ சேகரனாருக்கு பரமக்குடியில்‌ திருவுருவச்‌ சிலையுடன்‌ கூடிய மணிமண்டபம்‌ தமிழ்நாடு அரசின்‌ சார்பில்‌ அமைக்கப்படும்‌ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Image

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தியாகி இம்மானுவேல்‌ சேகரனார்‌ அவர்களுக்கு திருவுருவச்‌ சிலையுடன்‌ கூடிய மணிமண்டபம்‌ அமைக்கப்பட வேண்டும்‌ என்பது அப்பகுதி மக்களின் நண்ட நாள்‌ கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில்‌ தேவேந்திர குல வேளாளர்‌ கல்வியாளர்‌ குழு. தேவேந்திரர்‌ பண்பாட்டுக்‌ கழகம்‌, திரு.இம்மானுவேல்‌ சேகரனாரின்‌ மகள்‌ திருமதி.சூரிய சுந்தரி பிரபா ராணி மற்றும்‌ அண்ணாரது பேரன்‌ திரு.சக்கரவர்த்தி ஆகியோர்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்களை நேரில்‌ சந்தித்து இக்கோரிக்கையினை வலியுறுத்தினர்‌.

தியாகி இம்மானுவேல்‌ சேகரனார்‌ அவர்கள்‌ 1924-ஆம்‌ ஆண்டு அக்டோபர்‌ 9 அன்று பிறந்தார்‌. இவரது சொந்த ஊர்‌ முதுகுளத்தூர்‌ வட்டம்‌, செல்லூர்‌ கிராமம்‌ ஆகும்‌. இவர்‌ 1942-இல்‌ ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்‌ கலந்து கொண்டு சிறைவாசம்‌ சென்றார்‌. மேலும்‌ ஒடுக்கப்பட்டோர்‌ விடுதலைக்காகவும்‌ போராடியவர்‌ என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்‌ பொதுமக்களின்‌ நீண்ட நாள்‌ கோரிக்கையினை நிறைவேற்றிடும்‌ போற்றும்‌ வகையில்‌ அவரது பிறந்தநாள்‌ நூற்றாண்டினையொட்டி அன்னார்‌ நல்லடக்கம்‌ செய்யப்பட்ட இராமநாதபுரம்‌ மாவட்டம்‌, பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில்‌ சுமார்‌ ரூபாய்‌ 3 கோடி மதிப்பிட்டில்‌ திரு. இம்மானுவேல்‌ சேகரணார்‌ அவர்களுக்கு திருவுருவச்‌ சிலையுடன்‌ கூடிய மணிமண்டபம்‌ தமிழ்நாடு
அரசின்‌ சார்பில்‌ கட்டப்படும்‌” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

Image

முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ள இம்மானுவேல் சேகரன் மகள் பிரபாராணி, “எனது தந்தை இம்மானுவேல் சேகரனுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என அறிவிப்பு வெளியாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராமநாதபுரம் முன்னாள் எம்பி பவானி ராஜேந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறேன். திமுக ஆட்சிக்கு தங்களது சமுதாய மக்கள் எப்போதும் விசுவாசமாக இருப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.

MUST READ